Tuesday, June 23, 2009

முத்தமிழ் கூகிள் குழுமம்

அன்பின் மோகன் அவர்களே
ஒரு சிறந்த படைப்பினை அளித்துள்ளீர், சிறந்த என்பது அவரவரைப்பொறுத்து வேறுபடும், என்னைப்பொறுத்தவரை இது ஒரு சிறந்த , நல்ல காதல் கதை, ஏனோ நண்பர் சேவியர் அவர்களின் மனசே லவ் ப்ளீஸ் என்ற கவிதை நினைவிற்கு வந்தது.....அன்னிய நாட்டுப்பெண்ணை மணக்கும் இறுதிப்பகுதியாக இருக்கலாம், அல்லது தோழன் கொடுக்கும் அறிவுரையாக இருக்கலாம்....எப்படியோ, நல்ல ஒரு படைப்பு, நட்சத்திரம் போட்டுவைத்து இன்று ஒரே மூச்சில் படித்து முடித்து பின்னூட்டமும் இட்டுவிட்டேன், தங்களின் மற்ற படைப்புகளையும் காண ஆவல், விரைவில் உங்களின் மற்ற படைப்புகளின் கோப்புகளையும் எதிர்பார்க்கும், உங்கள் அன்பு
சிவா...
வாழ்க வளமுடன்.....

--------------------------------
ஹப்பா பெரிய கதை ஆனாலும் படித்து முடித்து விட்டேன். நல்ல கதையோட்டம், நல்ல பொழுதுபோக்கு கதை எனலாம். பிழை நீக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வாழ்த்துக்கள் மோகன்.
அன்புடன்
ஜெஸிலா
-------------------------------------------


No comments:

Post a Comment